புதிதாக விவரங்களை இணைத்தல், திருத்தங்களைத் தெரிவித்தல்:

உங்களிடமுள்ள மாவீரர், மாமனிதர் மற்றும் நாட்டுப் பற்றாளர் போன்றோரின் தரவுகள், நிழற்படங்கள், சான்றுகள் மற்றும் வரலாற்றுக் குறிப்புகளைப் பதிவேற்றுவதன் ஊடாக, இந்த வரலாற்று ஆவணத்தை மேன்மேலும் வளப்படுத்துவோம்.

பயனர் உருவாக்கம் மற்றும் பயன்பாடு தொடர்பான விளக்கம்

இத்தளத்தில் நீங்கள் ஒரு பயனராகப் பதிவு செய்துகொள்வதன் மூலம், புதிய மாவீரர் விவரங்களைச் சேர்க்க (எமக்கு அனுப்ப) முடியும்.

அத்துடன், பயனராக உள் நுழைந்த ஒருவர், ஏற்கனவே உள்ள விவரங்களில் மாற்றங்கள் அல்லது திருத்தங்கள் இருப்பின், அவற்றை 'மாற்றக் கோரிக்கை' வழியாக எமக்குத் தெரியப்படுத்தலாம்.

கணக்கை உருவாக்குதல்:
பயனராகப் பதிவு செய்து கொள்வதற்கு, முதன்மைப் பட்டியில் உள்ள 'பதிவு செய்' என்பதைத் தெரிவு செய்து, அங்கு தோன்றும் படிவத்தை நிரப்புதல் வேண்டும். இதன்போது உங்களது பயனர் பெயரையும் கடவுச் சொல்லையும் மறக்காதிருப்பதற்கு, அவைகளைக் குறித்துக் கொள்ளவும்.

கணக்கு உருவாக்கம் நிறைவடைந்ததும், "உள் நுழை" என்பதைத் தெரிவு செய்து உள் நுழையலாம்.

முக்கிய குறிப்பு: பயனராகப் பதிவு செய்வோரின் விவரங்கள் மிகவும் பாதுகாப்பாக வைத்திருக்கப்படும்.

புதிய விவரங்களைச் சேர்த்தல்:
புதிதாக ஒரு மாவீரர் விவரத்தைச் சேர்க்கும் முன்னர், அந்த விவரம் இத்தளத்தில் ஏற்கனவே உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளவும்.

தேடுதல் முறை: இதற்குத் தளத்திலுள்ள " தேடற் பகுதி" யைத் தெரிவு செய்து, குறிப்பிட்ட மாவீரரின் பெயர் அல்லது தேடற் பகுதியில் உள்ள ஏனைய விவரங்களை உள்ளீடு செய்து தேடிப் பார்க்கலாம்.

அவ்வாறு தேடும்போது, குறித்த மாவீரரின் விவரம் ஏற்கனவே தளத்தில் இருந்தால், மீண்டும் புதிதாகச் சேர்ப்பதைத் தவிர்க்கவும். எனினும், அம்மாவீரர் தொடர்பான இதுவரை சேர்க்கப்படாத மேலதிக விவரங்கள், புகைப்படங்கள் அல்லது வரலாற்றுக் குறிப்புகள் உங்களிடம் இருப்பின், குறித்த மாவீரரின் விவரங்களின் மேற் பகுதியில் காண்பிக்கப்படும் "மாற்றக் கோரிக்கை" என்பதைத் தெரிவு செய்து, அதன் வழியாக உள்ளீடு செய்யலாம்.

«வீரவேங்கை மாவீரர்» என்கின்ற அடையாளப்படுத்தல் குறித்த விளக்கம்:

இத்தளத்தில் இறுதிப் போரில் வீரச்சாவடைந்த மாவீரர்கள் «வீரவேங்கை மாவீரர்» என்ற அடையாளத்துடன் ஆவணப்படுத்தப்பட்டுள்ளனர்.

முள்ளிவாய்க்கால் இறுதிப் போருக்குப் பின்னர் (18.05.2009), மாவீரர் விவரங்களை உறுதிப்படுத்திப் படைத்துறைத் தரநிலைகளை (Ranks) அறிவிப்பதற்கான தலைமைப் பீடமோ அல்லது அதிகாரபூர்வ படைத்துறைக் கட்டமைப்போ இல்லாத சூழ்நிலையில், படைத்துறைத் தரநிலைகளை வழங்குவது தேவையற்ற குழப்பங்களுக்கும் நிர்வாகச் சிக்கல்களுக்கும் வழிவகுக்கலாம்.

எனவே, இறுதிப் போர்க்கால மாவீரர்களுக்குத் தற்போதைய நிலையில் படைத்துறைத் தரநிலைகளை வழங்குவதில்லை என்றும், அவர்களை «வீரவேங்கை மாவீரர்» என மதிப்பளிப்பது என்றும் முன்னாள் போராளிகளும் புலம்பெயர் தேசங்களிலுள்ள செயற்பாட்டாளர்களும் ஒருமனதாக முடிவு செய்துள்ளனர். அதன் அடிப்படையிலேயே இத்தளத்திலும் அவர்கள் "வீரவேங்கை மாவீரர்" என அடையாளப்படுத்தப்படுகின்றனர்.

வீரவணக்கம்

இன்றைய நாளில் தாயக விடுதலைக்காகத் தமது இன்னுயிர்களை ஈகம் செய்த மானமாவீரர்களுக்கு எமது வீர வணக்கம்.

கடற் கரும்புலி

அனைத்தும் பார்க்க

வீரவேங்கை "மாவீரர்" நாதினி

சிவராமலிங்கம் ராகினி

அம்மன்கோவிலடி, அராலி, யாழ்ப்பாணம்.

19/07/1974 - 30/10/2008

யாழ். வெற்றிலைக்கேணி - பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" அனுசியாதேவி

பாலவிநாயகமூர்த்தி சுகந்தினி

புங்குடுதீவு, யாழ்ப்பாணம்

22/08/1978 - 12/05/2009

முல்லை மாவட்டம், வட்டுவாகல் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்

வீரவேங்கை "மாவீரர்" நிலா

சந்திரசேகரம் துஷிதராதேவி

வவுனியா

26/11/1982 - 01/04/2009

முல்லை மாவட்டம், சாளைப் பகுதியில் சிறிலங்காப் படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" யசோ / யசோதா

சுப்பிரமணியம் கல்பனா

தொண்டைமனாறு யாழ்ப்பாணம்.

30/03/1978 - 01/05/2009

முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையினர் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" தமிழ்மாறன்

விஜயகுலசிங்கம் அரவிந்தன்

திருகோணமலை.

26/07/1986 - 29/04/2009

முல்லைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படைகளுடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" நாமகள்

நாகராசன் சுயிதா

யாழ் மாவட்டம்

13/11/1978 - 18/05/2009

முல்லை மாவட்டம் முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மேஜர் காந்தரூபன்

யோகராசா கோணேஸ்வரன்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

10/09/1971 - 10/07/1990

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்கா கடற்படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் வினோத்

வேலுப்பிள்ளை திலகராசா

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

19/08/1970 - 10/07/1990

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்காக் கடற் படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் கொலின்ஸ்

பர்ணாந்து சில்வஸ்டர்

நறுவிலிக்குளம்,மன்னார்.

12/05/1969 - 10/07/1991

யாழ். வல்வெட்டித்துறைக் கடற் பரப்பில் தரித்து நின்ற சிறிலங்காக் கடற் படையின் “எடித்தாரா” போர் கப்பல் மீது கரும்புலித் தாக்குதலை மேற்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

காவல் துறை மாவீரர்

அனைத்தும் பார்க்க

வீரவேங்கை "மாவீரர்" ஜெனிவாகரன்

யோசெப் அல்பிரட் மெயோ ஜெனிவாகரன்

பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

21/07/1983 - 18/01/2009

முல்லை மாவட்டம் மன்னாகண்டல் பகுதியில் சிறிலங்காப் படையினருடனான நேரடி மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

நாட்டுப் பற்றாளர்

அனைத்தும் பார்க்க

அன்னை பூபதி

கணபதிப்பிள்ளை பூபதி

கிரான்,மட்டக்களப்பு.

03/11/1932 - 19/04/1988

மட்டக்களப்பு மாவட்டத்தின் அமிர்தகழி மாமாங்கேசுவரர் கோவில் முன்றலில் இந்திய வல்லாதிக்கத்திற்கு எதிராக 19.03.1988 இலிருந்து 31 நாட்கள் உண்ணாநிலை அறப்போரை நடாத்தி 19.04.1988 அன்று தியாகச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பேராசிரியர் துரைராஜா

அழகையா துரைராஜா

கம்பர்மலை, வடமராட்சி, யாழ்ப்பாணம்.

10/11/1934 - 11/06/1994

—

வீரவேங்கை "மாவீரர்" மதிநிலா

பீட்டர் வனஜா

யாழ் மாவட்டம்

16/05/1985 - 04/04/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" இன்பத்தூயோன்

சிவபாலன் சுதர்சன்

அளம்பில், முல்லைத்தீவு.

02/10/1980 - 29/04/2009

முல்லை மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் கடற் பரப்பில் சிறிலங்காக் கடற்படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" நிலவரசன்

தியாகராசா நகுலேஸ்வரன்

திரியாய், திருகோணமலை

12/06/1984 - 03/02/2009

முல்லைத்தீவு மாவட்டத்தின் சாளைப் பகுதியில் சிறிலங்கா
படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" புரட்சிகரன்

பாபு பாஸ்கரன்

பள்ளிக்குடா, பூநகரி, கிளிநொச்சி.

08/07/1985 - 03/01/2009

யாழ். பருத்தித்துறைக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற் படையினருடனான மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

பிரிகேடியர் விதுசா / யாழினி

கந்தையா ஞானபூரணி

கரவெட்டி, யாழ்ப்பாணம்

29/09/1969 - 04/04/2009

முல்லை மாவட்டம் புதுக்குடியிருப்பின் ஆனந்தபுரம் பகுதியில் சிறிலங்காப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட பாரிய முற்றுகைக்கு எதிராகத் தீரமுடன் இறுதிவரை, படைநடாத்தி வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

முள்ளிவாய்க்கால் இறுதிச் சமர் - மாவீரர்

அனைத்தும் பார்க்க

வீரவேங்கை "மாவீரர்" சுடர்மதி

கறுப்பையா பிரியதர்சினி

கிளிநொச்சி மாவட்டம்

01/10/1984 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" கலையரசி

கறுப்பையா விக்னேஸ்வரி

கிளிநொச்சி மாவட்டம்

05/05/1979 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" ஈழமங்கை

இராசேந்திரம் லலித்தாம்பிகை

யாழ் மாவட்டம்

26/04/1979 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" உசா

செபமாலை ஜேம்ஸ்குமாரி

யாழ்ப்பாணம்

19/03/1971 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் படைநடாத்தி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

வீரவேங்கை "மாவீரர்" யாழ்நிலா

சிவபாதம் நளாயினி

வவுனியா மாவட்டம்

15/02/1985 - 18/05/2009

முள்ளிவாய்க்கால் பகுதியில் சிறிலங்காப் படைகளுக்கெதிராக இறுதிவரை, தீரமுடன் களமாடி, வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

மூத்த உறுப்பினர்/ அடிக்கற்கள்

அனைத்தும் பார்க்க

மேஜர் அல்பேட்

கந்தையா ரூபநிதி

அச்சுவேலி, யாழ்ப்பாணம்.

24/06/1961 - 21/12/1985

யாழ்ப்பாணம், சுதுமலையில் அமைந்திருந்த எமது முகாமை சிறிலங்காப் படையினர் சுற்றிவளைத்த போது ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் ரஞ்சன் லாலா

கனகநாயகம் ஞானேந்திரமோகன்

ஓடக்கரை, பருத்தித்துறை, யாழ்ப்பாணம்.

02/09/1960 - 13/07/1984

யாழ்ப்பாணம் தொண்டமானாறு பகுதியில் உந்துருளியில் செல்லும் போது சிறிலங்காப் படையினரால் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் கேணல் விக்ரர்

மருசலீன் பியூஸ்லஸ்

பனங்கட்டிக்கொட்டு, மன்னார்.

24/11/1963 - 12/10/1986

மன்னார், அடம்பன் பகுதி நோக்கி முன்னேறி வந்த சிறிலங்காப் படையினருடன் ஏற்பட்ட நேரடி மோதலின் போது வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் லிங்கம்

சிங்காரவேல் செல்வகுமார்

வல்வெட்டித்துறை, யாழ்ப்பாணம்.

16/12/1960 - 29/04/1986

ரெலோ அமைப்பினரால் கடத்திச் செல்லப்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்களின் விடுதலை தொடர்பாகப் பேசுவதற்கு தலைமைப் பீடத்தால் அனுப்பப்பட்டவேளை, யாழ். கல்வியங்காட்டில் அமைந்திருந்த ரெலோ அமைப்பின் தலைமையகத்தில் வைத்து ரெலோ அமைப்பினரால் கண்ணில் சுடப்பட்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

லெப்ரினன்ட் கேணல் புலேந்தி அம்மான் / புலேந்திரன்

குணநாயகம் தருமராசா

பாலையூற்று, திருகோணமலை.

07/06/1961 - 05/10/1987

தமிழீழக் கடற்பரப்பில் பயணிக்கும் போது சிறிலங்கா கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பலாலிப் படைத் தளத்திலிருந்து கொழும்பிற்குக் கொண்டு செல்வதற்கு இலங்கை - இந்திய அரசுகள் முயன்றவேளை, சயனைட் உட்கொண்டு வீரச்சாவைத் தழுவிக்கொண்டார்.

கப்டன் கரன்

வைத்திலிங்கம் மனோகரன்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம்.

—

—

"மாவீரம்" ஆவணக் காப்பகத்தின் நோக்கமும் பணிகளும்

தமிழீழ மக்களினதும் மண்ணினதும் விடுதலைக்காகத் தம்மை ஆகுதியாக்கிய வீரமறவர்களின் தரவுகள், சாதனைகள் மற்றும் தியாகங்களை ஆதாரங்களின் அடிப்படையில் சரியாகவும் நேர்த்தியாகவும் முழுமைப்படுத்தி, ஒரே தளத்தில் பாதுகாப்பான முறையில் ஆவணப்படுத்துவதே "மாவீரம்" maaveeram.info தகவல் தளத்தின் முதன்மை நோக்கமாகும்.

அனைவரும் எளிதாகப் பார்க்கும் வகையிலும் தேவையான விவரங்களைப் பெற்றுக்கொள்ளும் வகையிலும் இத்தளம் வடிவமைக்கப்பெற்றுள்ளது.

இது தமிழினத்தின் வரலாற்றுச் சொத்தாகவும் எமது எதிர்காலத் தலைமுறையினருக்கான வழிகாட்டியாகவும் அமைகிறது.

விடுதலைக்கான ஆயுதப் போராட்டம் நடைபெற்ற காலங்களில் அறிவிக்கப்பெற்ற மாவீரர்களின் விவரங்கள் பல்வேறு வழிகளிலும் சேகரிக்கப்பட்டு இலத்திரனியல் மயமாக்கப்பெறுகின்றன.

அதேவேளை, முள்ளிவாய்க்கால் இறுதிப் போர் வரை, களமாடி வீரச்சாவடைந்த மாவீரர்களின் விவரங்களையும் "தமிழீழ மாவீரர் பணிமனை" ஊடாக உறுதிப்படுத்தி இணைத்து வருகிறோம்.

இந்த ஆவணத் தொகுப்பிலுள்ள தகவல்கள் அனைத்தும் விடுதலைப் போராட்டத்தில் பயணித்த தளபதிகள், பொறுப்பாளர்கள், போராளிகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் மாவீரர்களின் குடும்பத்தினரால் உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே ஆவணமாக்கப்படுகின்றன.

இவ்விவரங்களில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் இருப்பின், அவற்றை எமக்குத் தெரியப்படுத்தும் உரிமை அனைவருக்கும் உண்டு என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

மேலும், இந்த ஆவணத் தொகுப்பில் இதுவரை சேர்க்கப்படாத மாவீரர்கள், மாமனிதர்கள் மற்றும் நாட்டுப்பற்றாளர்களின் விவரங்களைச் சேர்க்கும் பணியில் எம்முடன் இணைந்து கொள்ளுமாறு உங்களை அன்புடன் வேண்டுகிறோம்.

"நன்றி"
நிர்வாகம்,
"மாவீரம்" ஆவணக் காப்பகம்.